This article is currently in the process of being translated into Tamil (~99% done).
Hello, world!
இதற்கு முன் ஏதேனும் கணினி மொழியை கற்றிருந்தால், அந்த மொழிகள் "Hello World!" எனும் உதாரண ப்ரோக்ராம் உடன் துவக்க பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். நாம் மட்டும் விதி விலக்கா என்ன? Visual Studio Community ஐ திறந்து அதில் File மெனுவில் New வை தேர்ந்து எடுத்து அதில் Project ஐ கிளிக் செய்யவும் (File -> New -> Project). இப்போது தோன்றிடும் Project Dialog இல் Console App (.NET Framework) ஐ தேர்வு செய்யவும்.இதுதான் windows சிஸ்டமின் மிக சாதாரண அப்ளிகேஷன் வகை ஆகும். நீங்கள் OK பட்டனை அழுத்தியதும் Visual Studio உங்களுக்காக புது ப்ரொஜெக்ட்டை உருவாக்கும், அதில் Program.cs எனும் பைல் அடக்கம். இந்த பைலில் தான் சில விஷயங்கள் உள்ளன, அது கீழ்காணும் உதாரணத்தை போன்று இருக்கும்.
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;
namespace ConsoleApp1
{
class Program
{
static void Main(string[] args)
{
}
}
}
மேலே கொடுத்துள்ள ப்ரோக்ராம் வெறும் structure மட்டுமே. அந்த ப்ரோக்ராமை F5 பட்டன் அழுத்தி நீங்கள் execute செய்யலாம். ஆனால், அதில் எதுவும் எழுத படாததால் ஒரு கருப்பு விண்டோ திறந்து தானாக மூடுவதை காண முடியும்.அடுத்த பாகத்தில் ஒவ்வொரு வரியாக அறிந்து கொள்ளளவிருக்கிறோம். இப்போதைக்கு ஏதாவது result காண விழைந்தால் கீழ்க்காணும் வரிகளை கடைசி { மற்றும் } குள் சேர்க்கவும்.
Console.WriteLine("Hello, world!");
Console.ReadLine();
உங்களுடைய முதல் அப்ளிகேஷனின் code இவ்வாறு இருக்கலாம் :
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;
namespace ConsoleApp1
{
class Program
{
static void Main(string[] args)
{
Console.WriteLine("Hello, world!");
Console.ReadLine();
}
}
}
மீண்டும் F5 பட்டனை அழுத்த, கருப்பு நிற விண்டோ இந்த முறை தானாக மூடி கொள்ளாமல் நிற்பதை காணலாம், அதில் நாம் இணைத்த செய்தியும் காணலாம்.நாம் சேர்த்த கோடிங் வரிகள் என்ன செய்தன என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் தானே! அதுதான் C# மற்றும் .NET framework இன் மாயாஜாலம். C# பற்றி தெரியாதவர் கூட எளிமையாக புரிந்து கொள்வர் என்பதை இந்த உதாரணம் உணர்த்துகிறது.
நாம் சேர்த்த முதல் வரி, Console கிளாஸ் உபயோக படுத்தி நமது செய்தியை காட்டுகிறது. இரண்டாம் வரி உபயோகிப்பவரிடம் இருந்து செய்தியை பெற/படிக்க(Read) விழைகிறது.எதற்க்காக என்று நீங்கள் கேட்பது புரிகிறது.அதில் சிறு தந்திரம் உள்ளது. அந்த வரியை சேர்க்கா விடில் அப்ளிகேஷன் பூர்த்தி ஆகி அதில் காட்டப்பட்டிருக்கும் செய்தியையும் படிப்பதற்க்குள் அந்த விண்டோ மூடி விடும்.
ReadLine கட்டளை (command) அப்ளிகேஷனிற்கு, அதனை உபயோப்பவரின் input காக காத்திருக்குமாறு பணிக்கிறது.இதனால் நீங்கள் ஏதேனும் தட்டச்சு செய்ய முடியும். Enter பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் அதனை மூடலாம். வாழ்த்துக்கள், நீங்கள் உங்களது முதலாம் C#அப்ளிகேஷனை உருவாக்கி விட்டீர்கள். அடுத்த பாகத்தை தொடர்வதன் மூலம் மேலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.